அக்ஷய் ராஜ் எனும் 14 வயது சிறுவன் வடிவமைத்த லோகோவே இன்றை கூகிள் முகப்பில் காட்சியளிக்கிறது. Doodle 4 Google எனும் போட்டி ஒன்றினை கூகிள் இந்தியாவில் ஒழுங்கு செய்து நடாத்திவந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் பல பக்கத்திலிருந்தும் வடிவமைக்கப்பட்ட 108000 ஆக்கங்கிலிருந்து அக்ஷயின் படைப்பு இன்று இரண்டு இலட்சம் பரிசினை வென்றுள்ளது.
கூகிள் நிறுவனத்தின் அற்புதத்தில் ஒன்றான Google Earth ன் புதிய பதிப்பான Google Earth 6 இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய பதிப்பின் மூலம் உலகத்தை இன்னும் உண்மையாக காணக்கூடியதாக உள்ளது
Google wave மறு பிறவி எடுக்கவிருக்கிறது
இவ்வாறு கைவிடப்பட்ட கூகிள் வேவ் ற்கு Apache நிறுவனம் மறுபடியும் உயிர் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மீழ் வடிவமைப்பு தொடர்பான
உத்தேசத்திட்டமானது Apache நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கூகிள் வேவ் கைவிடப்பட்டதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளின் காரணமாக கூகிள் தனது வேவ் தொடர்பான முழு அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே Apache நிறுவனம் தனது மீள் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.
கூகிள் வேவ் ஒரு அற்புதமான படைப்பாக இருந்த போதும் , இது ஏன் மக்களை போய்ச் சேரவில்லை எனபது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்துவந்தது ஆனால் இந்தச் செய்தியானது எனக்கு மிகவும் சந்தோசத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மீள் வருகை தொடர்பான உங்கள் கருத்து என்ன? கூகிள் வேவினை உங்களுக்கு பிடித்திருந்ததா? இதனை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்களா?
Recent Posts:
No comments:
Post a Comment